தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி மாணவர்கள் மூவர் பலி

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி மாணவர்கள் மூவர் பலி

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி மாணவர்கள் மூவர் பலி


ADDED : பிப் 25, 2024 07:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2024 07:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரம்பலுார்: அரியலுார் அருகே, கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி, மாணவர்கள் மூவர் பலியாகினர்.

சென்னை அம்பத்துார் பகுதியை சேர்ந்த பிளஸ் 1 மாணவரான முனுசாமி மகன் சந்தானகிருஷ்ணன்,17, இதே பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவனான பூமிநாதன் மகன் பச்சையப்பன்,18, பி.இ., முதலாமாண்டு மாணவனான தஞ்சாவூர் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் தீபக்,21, மூவரும், மாசிமக திருவிழாவை முன்னிட்டு தங்களது நண்பரான, தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அம்மாள் கிராமத்தில் உள்ள அரவிந்தன் மகன் சந்தோஷ் என்பவர் வீட்டுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வந்தனர்.

நேற்று மதியம் 1:30 மணியளவில் சந்தானகிருஷ்ணன், பச்சையப்பன், தீபக் ஆகிய மூன்று மாணவர்கள் உட்பட ஒன்பது பேர் அரியலுார் மாவட்டம், திருமானுார் சோதனை சாவடி அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக சென்றனர். அனைவரும் ஆற்றில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனர். அதில், சந்தானகிருஷ்ணன், பச்சையப்பன், தீபக் மூவரும் ஆற்றுத்தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டனர். மீதியுள்ள ஆறு பேரும் கரைக்கு திரும்பினர்.

தகவலறிந்த அரியலுார் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி தேடினர். மாலை 4.45 மணியளவில் சந்தானகிருஷ்ணன், பச்சையப்பன் ஆகிய இரண்டு மாணவர்களின் உடல்களை இறந்த நிலையில் மீட்டு, அரியலுார் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைத்தனர். மாணவன் தீபக்கின் உடலை நேற்று இரவு 7 மணி வரை தேடினர். அதன்பின்னர், இருட்டாகியதால் தீயணைப்பு வீரர்கள் கரைக்கு திரும்பினர். இன்று மாணவன் தீபக்கின் உடல் தேடப்பட உள்ளது. இதுகுறித்து, திருமானுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us