ADDED : மே 15, 2025 02:04 AM
சென்னை:சென்னை - போடிநாயக்கனுார் உட்பட, நான்கு ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:
ரயில்களின் இயக்கத்தை முறைப்படுத்தும் வகையில், வரும் ஜூலை 11 முதல், சில ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது
சென்னை சென்ட்ரல் - பாலக்காடு விரைவு ரயில், ஜூலை 11 முதல், திண்டுக்கல்லுக்கு காலை 5:30 மணி, பழனி காலை 6:25, பொள்ளாச்சி 7:35, பாலக்காடுக்கு காலை 9:15 மணிக்கு செல்லும்
பொள்ளாச்சி - கோவை பயணியர் ரயில், பொள்ளாச்சியில் இருந்து காலை 7:50 மணிக்கு புறப்பட்டு, போத்தனுாருக்கு காலை 8:36 மணிக்கும், கோவைக்கு காலை 8:55 மணிக்கும் செல்லும்
சென்னை சென்ட்ரல் - போடி நாயக்கனுார் ரயில், திண்டுக்கல்லுக்கு காலை 5:47 மணி, மதுரைக்கு 6:40 மணி, தேனிக்கு காலை 8:03 மணி, போடிக்கு காலை 8:55 மணிக்கு செல்லும்
மைசூரு - துாத்துக்குடி ரயில், திண்டுக்கல்லுக்கு காலை 6:03 மணி, கொடைக்கானல் ரோடுக்கு காலை 6:13 மணி, திருமங்கலம் காலை 7:55 மணி, விருது நகர் காலை 8:18 மணி, துாத்துக்குடிக்கு காலை 10:15 மணிக்கு செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.