திருப்பூர் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்
திருப்பூர் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்
UPDATED : மார் 19, 2025 03:18 AM
ADDED : மார் 18, 2025 10:10 PM
சென்னை:திருப்பூர் மாவட்டத்தில், தோட்டத்தில் படுத்திருந்த, தந்தை, தாய், மகன் ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, சேமலைக்கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி, 78; இவரது மனைவி அலமேலு, 75. மகன் செந்தில்குமார், 46, மகள் பத்மாவதி.
செந்தில்குமார், கோவையில் குடும்பத்தாருடன் வசித்து வந்தார். பத்மாவதி, சென்னிமலையில் தன் கணவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
தெய்வசிகாமணி, அலமேலு ஆகியோர், சேமலைக்கவுண்டன் பாளையத்தில் தங்களுக்கு சொந்தமான, 16 ஏக்கர் தோட்டத்தில் வசித்து வந்தனர்.
கடந்தாண்டு, நவம்பர், 29ல், தோட்டத்து வீட்டில், தெய்வசிகாமணி, அலமேலு, செந்தில்குமார் ஆகியோர் மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.
இக்கொலைகள் குறித்து பல்லடம் போலீசார், 14 தனிப்படைகள் அமைத்து விசாரித்தும், கொலையாளிகள் குறித்து துப்பு துலக்க முடியவில்லை.
இந்நிலையில் இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு மாற்றி, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

