சரக்கு ரயில் மீது மோதியது எக்ஸ்பிரஸ் ரயில்; பெட்டிகள் தீப்பற்றியதால் அச்சம்!
சரக்கு ரயில் மீது மோதியது எக்ஸ்பிரஸ் ரயில்; பெட்டிகள் தீப்பற்றியதால் அச்சம்!
UPDATED : அக் 11, 2024 10:27 PM
ADDED : அக் 11, 2024 09:25 PM

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் ரயிலின் 2 பெட்டிகள் தீப்பிடித்தன. இச்சம்பவத்தில் உயிரிழப்பு ஏதும் இல்லை என தெரியவந்துள்ளது
மைசூரு தர்பங்கா பயணிகள் விரைவு ரயில் (எண் 12578) ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்தது. மணிக்கு 90 கி.மீ., வேகத்தில், திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே வந்த போது ,லூப்லைனில் நுழைந்து, எதிர்பாராத விதமாக அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது திடீரென மோதியது.
விபத்து குறித்து தகவலறிந்த உள்ளூர் மக்களும், உள்ளூர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்றனர். மேலும், இதுபற்றிய விவரத்தை அங்குள்ள மக்கள் ரயில்வே உயரதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து ரயில்வே உயரதிகாரிகளும், ரயில்வே மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சிக்னல் கோளாறு காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
மீட்பு பணியில் ஈடுபட அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.
ரயில்கள் தாமதம்
இந்த விபத்து காரணமாக, நீலகிரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில ரயில்கள் கிளம்பவில்லை.