தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ குரூப் 2, 2A தேர்வு முறையில் திடீர் மாற்றம்! டி.என்.பி.எஸ்.சி. முக்கிய அறிவிப்பு

குரூப் 2, 2A தேர்வு முறையில் திடீர் மாற்றம்! டி.என்.பி.எஸ்.சி. முக்கிய அறிவிப்பு

குரூப் 2, 2A தேர்வு முறையில் திடீர் மாற்றம்! டி.என்.பி.எஸ்.சி. முக்கிய அறிவிப்பு


UPDATED : டிச 20, 2024 05:05 PM

ADDED : டிச 20, 2024 04:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 20, 2024 05:05 PM ADDED : டிச 20, 2024 04:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: கணினி வழியில் இல்லாமல், ஓ.எம்.ஆர்., முறையில் குரூப் 2, 2 ஏ முதன்மை தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2540 குரூப் 2 மற்றும் குரூப் 2A பணியிடங்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு கடந்த செப்.14ம் தேதி நடத்தப்பட்டு அதன் முடிவுகள் டிசம்பர் 12ம் தேதி வெளியானது. இதை தொடர்ந்து, முதன்மைத் தேர்வுகள் நடத்தப்படும். 2 தாள்கள் கொண்ட தேர்வில், 2ம் தாள் தேர்வு கணினி வழித்தேர்வாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந் நிலையில், குரூப் 2, 2A பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. அதன்படி இந்த தேர்வு ஓ.எம்.ஆர்(OMR - Optical mark recognition) எனப்படும் ஒளிக்குறி உணரி முறையில் நடத்தப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி,, அறிவித்து இருக்கிறது.

மேலும் குரூப் 2, 2A பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வின் பொது தமிழ் மற்றும் பொது ஆங்கிலத்துக்கான பாடத்திட்டமும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுக்கான- IV தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வுக்கான பாடத்திட்டமும் மாற்றி அமைக்கப்பட்டு தேர்வாணைய இணையதள பக்கத்தில் http://tnpsc.gov.in/tamil/syllabus.html மற்றும் https://tnpsc.gov.in/english/syllabus.html வெளியிடப்பட்டு உள்ளது.

முன்னதாக, தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை - II பதவியின் நேரடி நியமனத்துக்கான கணினிவழித் தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., ரத்து செய்திருந்தது, குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us