ADDED : மார் 17, 2024 03:52 AM

தேர்தல் கமிஷன் விதிமுறைகளின்படி, வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளில் இருந்து, 10 நாட்களுக்கு முன்னர் வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில், வேட்பு மனு தாக்கல் வரும் 20ம் தேதி துவங்கி, 27 ம் தேதி நிறைவடைய உள்ளது. எனவே, லோக்சபா தேர்தலில், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், தங்கள் பெயரை சேர்க்க விரும்புவோர், www.voters.eci.gov.in இணையதளத்திலும், 'Voter Helpline' மொபைல் ஆப்ஸ் வழியே விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறுகையில், ''இன்று வரை பெறப்படும் விண்ணப்பதாரர்களின் பெயர்களை, வாக்காளர் துணைப் பட்டியலில் சேர்க்க பரிசீலிக்கப்படும். அதன்பிறகும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அவை தேர்தலுக்கு பின் பரிசீலிக்கப்படும்,'' என்றார்.

