UPDATED : மார் 29, 2024 10:19 AM
ADDED : மார் 29, 2024 10:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.51,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ஆயிரம் அதிகரித்தது.
இந்தியாவில் தங்க நகை பயன்பாடு மற்றும் விற்பனையில், தமிழகம் முன்னணியில் உள்ளது. தமிழகத்தில், நேற்று தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து, 6,250 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரன் 280 ரூபாய் அதிகரித்து, 50,000 ரூபாயை எட்டியது.
இந்நிலையில், இன்று(மார்ச் 29) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.51,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.140 அதிகரித்து ரூ.6,390க்கு விற்பனையாகிறது.

