ADDED : அக் 06, 2024 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அத்தியாவசிய பொருட்களின் விலையை, அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. கூட்டுறவு அங்காடிகள் மற்றும் தமிழக நுகர்பொருள் வாணிப கழகத்தின் அமுதம் அங்காடிகளில், மளிகை உள்ளிட்ட பொருட்கள் தரமாகவும், நியாயமான விலையிலும் விற்கப்படுகின்றன.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து, ஏற்கனவே உள்ள நடைமுறைகளின் அடிப்படையில் தேவை ஏற்படும் பட்சத்தில், கூட்டுறவு பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில், வெளிச்சந்தையை விட குறைந்த விலைக்கு தக்காளி, பெரிய வெங்காயம் விற்க நடவடிக்கை எடுக்கப்படும்.
-- ராதாகிருஷ்ணன்
கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலர்.