தமிழக காங்கிரஸ் கோஷ்டிகளிடம் மேலிட பொறுப்பாளர் ஆலோசனை
தமிழக காங்கிரஸ் கோஷ்டிகளிடம் மேலிட பொறுப்பாளர் ஆலோசனை
ADDED : டிச 16, 2025 07:25 AM

சட்டசபை தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து, டில்லியில் தமிழக காங்கிரஸ் முன்னணி தலைவர்களுடன், மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் ஆலோசனை நடத்தினார்.
டில்லியில் நேற்று முன்தினம் ஓட்டு திருட்டை கண்டித்து, காங்கிரஸ் சார்பில், ராகுல் தலைமையில் பேரணி நடந்தது. அதில், தமிழக காங்கிரஸ் முன்னணி தலைவர்களும், நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
தி.மு.க., கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து, தமிழக காங்கிரசின் ஐவர் குழு, முன்னாள் தலைவர்கள் மற்றும் தமிழக எம்.பி.,க்களிடம், ராகுல் ஆலோசனை நடத்துவார் என கூறப்பட்டது.
ஆனால், பேரணி முடிந்தது ம், அன்று இரவே ராகுல், ஜெ ர்மனி சென்று விட்டார். இதனால், ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், டில்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில், மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் தலைமையில் நேற்று கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டசபை காங்., தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி.,க்கள் மாணிக் தாகூர், கார்த்தி, விஷ்ணுபிரசாத், ராபர்ட் புரூஸ், விஜய் வசந்த் உள்ளிட்ட சிலர் மட்டும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
கலந்துரையாடல் முடிந்த பின், தமிழகத்தில் இருந்து சென்ற மாநில நிர்வாகி கள், முன்னணி தலைவர்களை தனித்தனியாக சந்தித்து, கிரிஷ் ஷோடங்கர் கருத்துகளை கேட்டறிந்தார்.
இது குறித்து, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2026 சட்டசபை தேர்தலுக்கு பின் அமைந்த தி.மு.க., ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லை; காங்கிரஸ் தயவில் ஆட்சி நடந்தது.
ஆனால், தி.மு.க., ஆட்சியில் காங்கிரசுக்கு பங்கு தரவில்லை; அதற்கு பரிகாரமாக, இம்முறை ஆட்சியில் பங்கு என்ற நிபந்தனையுடன் கூட்டணி அமைக்க வேண்டும்.
அதற்கு தி.மு.க., உடன்படவில்லை என்றால், ஆட்சியில் பங்கு தர தயாராக இருக்கும் விஜய் தலைமையிலான த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என சில எம்.பி.,க்களும், பெரும்பான்மையான நிர்வாகிகளும் கிரிஷ் ஷோடங்கரிடம் வலியுறுத்தி உள்ளனர். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -

