வங்கிகளில் வேலை குறைந்துவிட்டது தொழிற்சங்க பிரதிநிதிகள் கண்டனம்
வங்கிகளில் வேலை குறைந்துவிட்டது தொழிற்சங்க பிரதிநிதிகள் கண்டனம்
ADDED : ஜூலை 09, 2025 10:05 PM
இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தென் மண்டல பொருளாளர் சிவசுப்ரமணியன், வங்கி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் குமரன் ஆகியோர் கூறுகையில், 'இன்சூரன்ஸ் துறையில், 100 சதவீத அன்னிய முதலீட்டை கொண்டு வருவதை எதிர்க்கிறோம். இதை நடைமுறைப்படுத்தினால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திடீரென வெளியேறுவதற்கு வாய்ப்புள்ளது; வேலை வாய்ப்பு அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை.
'பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒருங்கிணைத்தால், தனியார் முதலீட்டுக்கு வேலையே இல்லை. இதனால் தான் மத்திய அரசு இவற்றை ஒருங்கிணைக்க மறுக்கிறது.
'வங்கி, இன்சூரன்ஸ், அஞ்சல் என எல்லா துறைகளிலும் வேலைவாய்ப்பை மத்திய அரசு குறைத்து விட்டது.
'தற்காலிக, ஒப்பந்த, தினக்கூலிக்கு ஆட்களை தேர்வு செய்யும் திட்டம் அதிகரித்து விட்டதால், தொழிலாளர்களின் உரிமைகள் பறிபோகும் அபாயம் உள்ளது. மத்திய அரசின் போக்கை கண்டித்து, அகில இந்திய பொது வேலை நிறுத்தம் அறிவித்தோம்' என்றனர்.