கொள்ளை முயற்சியை தடுத்ததால் விபரீதம் கோவில் காவலாளிகள் 2 பேர் வெட்டிக்கொலை
கொள்ளை முயற்சியை தடுத்ததால் விபரீதம் கோவில் காவலாளிகள் 2 பேர் வெட்டிக்கொலை
ADDED : நவ 12, 2025 01:53 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே நள்ளிரவில், கோவிலில் நடந்த கொள்ளை முயற்சியை தடுத்த இரு காவலாளிகள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானத்தில், சேத்துார் ஜமீனுக்கு பாத்தியப்பட்ட பிரசித்தி பெற்ற நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் உள்ளது.
நுாற்றாண்டு பழமை வாய்ந்த இக்கோவில், தென்பாண்டி நாட்டு பஞ்சபூத தலங்களில் ஆகாயமாக போற்றப் படுகிறது.
ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு உட்பட்ட இக்கோவிலில், அப்பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து, 50, சங்கரபாண்டியன், 65, ஆகியோர் நேற்று முன் தினம், இரவு காவலாளிகளாக பணி புரிந்தனர்.
பகல் நேர காவலாளி மாடசாமி, 65, நேற்று காலை 6:45 மணிக்கு கோவிலுக்கு சென்ற போது, இரவு காவலாளிகள் இருவரும் கழுத்து, கை, கால் உள்ளிட்ட பல இடங்களில் வெட்டப்பட்ட நிலையில், படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
கோவிலுக்குள் இருந்த, 'சிசிடிவி கேமரா'க்கள் சேதப்படுத்தப்பட்டு, கேமரா பதிவு டி.வி.ஆர்., கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது; உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. டி.ஐ.ஜி., அபினவ்
தொடர்ச்சி 5ம் பக்கம்

