போக்குவரத்து ஓய்வூதியர்கள் டிச.,30, 31ல் போராட்டம்
போக்குவரத்து ஓய்வூதியர்கள் டிச.,30, 31ல் போராட்டம்
ADDED : டிச 24, 2024 03:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : -தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் நல அமைப்பு சார்பில் வாயில் கருப்பு துணி கட்டி டிச.30, 31ல் தமிழகம் முழுவதும் கோட்டம், மண்டல அலுவலகங்கள் முன்பு முதல்வருக்கு நினைவூட்டும் போராட்டம் நடத்தவுள்ளனர்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முதல்வர் மவுனம் கலைக்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய 109 மாத அகவிலைப்படி நிலுவையுடன் டி.ஏ., உயர்வு வழங்க வேண்டும். 21 மாத ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும்.
பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
ஓய்வூதியருக்கு மருத்துவ காப்பீடு திட்டம் ஆகியவற்றை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் நல அமைப்பின் மாநிலத் தலைமை அறிவித்துள்ளது.