sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மலையேற்ற பயண கட்டணம் 30 சதவீதம் வரை குறைப்பு

/

மலையேற்ற பயண கட்டணம் 30 சதவீதம் வரை குறைப்பு

மலையேற்ற பயண கட்டணம் 30 சதவீதம் வரை குறைப்பு

மலையேற்ற பயண கட்டணம் 30 சதவீதம் வரை குறைப்பு

1


UPDATED : ஆக 08, 2025 06:16 AM

ADDED : ஆக 08, 2025 05:50 AM

Google News

1

UPDATED : ஆக 08, 2025 06:16 AM ADDED : ஆக 08, 2025 05:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மலையேற்ற பயணங் களுக்கான கட்டணங்களை, சலுகை அடிப்படையில், 30 சதவீதம் வரை, வனத்துறை குறைத்துள்ளது.

தமிழகத்தில், 14 மாவட்டங்களில், 40 மலையேற்ற வழித்தடங்கள் குறித்த, டிஜிட்டல் வரைபடங்கள், கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்டன. இதில், மலையேற்றத்துக்கு செல்ல விரும்புவோர் பதிவு செய்வதற்காக, https://www.trektamilnadu.com/ என்ற இணையதளம் உருவாக்கப் பட்டது.

இதில், எளிதான பகுதி 14; மிதமான பகுதி 14; கடினமான பகுதி 12 இடங்கள் என, வகைப் படுத்தப்பட்டு உள்ளன. அந்தந்த பகுதி உள்ளூர் மக்கள், பழங்குடியினரில் இருந்து, இதற் கான வழிகாட்டிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இத்திட்டத்தில் பங்கேற்பாளராக பதிவு செய்ய, 700 ரூபாய் முதல், 5,999 ரூபாய் வரை, பல்வேறு நிலை களில் கட்டணங்கள் நிர்ண யிக்கப்பட்டுள்ளன. இந்த பயண திட்டத்துக்கு, மக்கள் ஆதரவு கிடைத்தாலும், கட்டணங்கள் அதிகமாக இருப்பதாக புகார் எழுந்தது.

அதைத் தொடர்ந்து, மலை யேற்ற பயணங்களுக்கான, கட்டணங்களை குறைக்க, வனத்துறை முடிவு செய்தது. அதன்படி, பல்வேறு வழித் தடங்களுக்கான கட்டணங்கள், சலுகை அடிப்படையில், 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக, கொடைக்கானல் - கும்பக்கரை 'கேம்ப்' பயணத்துக்கு, 3,799 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்த கட்டணம், தற்போது, 2,999 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

Image 1453524

இதே போல், பல்வேறு பயண திட்டங்களுக்கான கட்டணங்கள், சலுகை அடிப்படையில் குறைக்கப்பட்டு உள்ளன.






      Dinamalar
      Follow us