ADDED : ஏப் 24, 2025 09:06 PM
சென்னை:அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு எதிரான அவதுாறு வழக்கு விசாரணைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கோவை விமான நிலையத்தில், கடந்தாண்டு ஜூனில் பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது, தனக்கு எதிராக அவதுாறு கருத்துகளை தெரிவித்ததாக கூறி, கோவை நீதிமன்றத்தில், பழனிசாமிக்கு எதிராக, முன்னாள் எம்.பி., - கே.சி.பழனிசாமி அவதுாறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த கோவை நீதிமன்றம், விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி பழனிசாமிக்கு, 'சம்மன்' அனுப்ப உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தனக்கு எதிரான அவதுாறு வழக்கை ரத்து செய்ய கோரியும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அவதுாறு வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்தும் உத்தரவிட்டார்.
மேலும், நான்கு வாரங்களுக்குள் மனுவுக்கு பதில் அளிக்கும்படி, கே.சி.பழனிசாமிக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.