ADDED : ஜன 21, 2026 07:05 AM

சென்னை: தமிழகத்தில், ஆயிரக்கணக்கான கோவில்களில் அறங்காவலர் குழு நியமிக்கப்படவில்லை என, கவர்னர் ரவி கூறிய குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் சேகர் பாபு அளித்துள்ள விளக்கம்:
ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், அறங்காவலர்களை நியமிக்க, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள், 8,488 கோவில்களில் நியமிக்கப் பட்டுள்ளனர்.
அடுத்து, 31,163 கோவில்களுக்கு, அறங்காவலர்கள் நியமிக்க விண்ணப்பம் கோரப்பட்டது. அவற்றில், 13,340 கோவில்களுக்கு விண்ணப்பம் வந்தன. அவை பரிசீலனையில் உள்ளன. மற்ற கோவில்களுக்கு விண்ணப்பங்கள் வரவில்லை.
நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் காரணமாக, 1,551 கோவில்களில் அறங்காவலர்களை நியமிக்க முடியவில்லை. அனைத்து கோவில்களிலும், அறங்காவலர்களை நியமிக்க, அரசு நடவடிக்கை எடுத்த வருகிறது.
விண்ணப்பங்கள் வராததே, பல கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் தாமதமாவதற்கு முக்கியக் காரணமாகும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

