‘த.வெ.க., அரசு அனைத்திலும் தோல்வி அடைந்து விட்டது’
‘த.வெ.க., அரசு அனைத்திலும் தோல்வி அடைந்து விட்டது’
UPDATED : அக் 23, 2026 07:11 PM
ADDED : அக் 23, 2026 07:07 PM
த.வெ.க., ஆட்சிக்கு வந்த பின், தினமும் பல்வேறு கொலை சம்பவங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
அரசு பொறுப்பில் இருக்கக்கூடிய யாரையும், இத்தகைய சம்பவங்கள் பாதிப்பதாகத் தெரியவில்லை. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவர்கள் என்ன ஆட்சி நடத்துகின்றனர் என்பதே எனக்குப் புரியவில்லை. சட்டம் ஒழுங்கை கூட சீர்செய்ய முடியாத அளவுக்குத் திறமையின்றி உள்ளனர்.
பெரிய வாக்குறுதிகளையும், வசனங்களையும் பேசி ஆட்சிக்கு வந்த முதல்வர் விஜய், அனைவருக்கும் நான் பாதுகாப்பாக இருப்பேன் என்றார்.
ஆனால், யாருக்குமே பாதுகாப்பு இல்லாத நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது. மக்கள் மீது முதல்வருக்கு அக்கறை இருக்கிறதா, இல்லையா என்பதும் தெரியவில்லை.
சட்டம், ஒழுங்கு பிரச்னை மட்டுமல்ல, அனைத்திலும் தோல்வியடைந்த இந்த அரசின் அவலங்களை மறைக்க ரீல்ஸ் மட்டுமே போதாதது. யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. இது ஆட்சியா, அலங்கோலமா என்றே தெரியவில்லை.
– கனிமொழி,
துணை பொதுச்செயலர், தி.மு.க.,
