மதுரை மாநாட்டுக்காக மேலும் 5 குழுக்கள்: நடிகர் விஜய் அறிவிப்பு
மதுரை மாநாட்டுக்காக மேலும் 5 குழுக்கள்: நடிகர் விஜய் அறிவிப்பு
ADDED : ஆக 16, 2025 10:22 AM

சென்னை: மதுரையில் நடைபெறும் தவெக மாநில மாநாட்டு பணிகளுக்காக மேலும் 5 குழுக்களை அமைத்து, அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஆக.25ம் தேதி மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பாரபத்தி பகுதியில் தவெக 2வது மாநில மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து மாநாட்டு தேதியை மாற்றுமாறு காவல் துறை கேட்டுக் கொண்டது.
இதையடுத்து, மாநாட்டு தேதி ஆக.21 என மாற்றப்பட்டது. அதை தொடர்ந்து மாநாட்டு ஏற்பாடு பணிகளில் தவெக நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். மாநாடு தொடங்க சில நாட்களே உள்ளதால் தவெக கட்சியினர் முழு வீச்சில் ஏற்பாடுகளில் இறங்கி உள்ளனர்.
இந் நிலையில், மாநாட்டு பணிகளுக்காக மேலும் 5 குழுக்களை அமைத்து நடிகர் விஜய் அறிவித்து வெளியிட்டு உள்ளார். வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு என்ற மாநில மாநாட்டு பணிகளுக்காக அமைக்கப்பட்ட 5 குழுக்கள் பட்டியல் கட்சியின் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.