உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 25, 2026 08:57 PM
ADDED : அக் 25, 2026 06:45 PM
அ நிறம் | அளவு
திருச்சி: திருவெறும்பூர் அருகே, கஞ்சா கடத்திய பிரபு, 32, குமரன், 55, ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் போலீசார், காட்டூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியாக, 'டிராவல் பேக்'குகளுடன் வந்த, இருவரை பிடித்து விசாரித்தனர்.
அதில் சேலம் மாவட்டம், மின்னாம்பள்ளியைச் சேர்ந்த பிரபு மற்றும் கர்நாடகா மாநிலம், மாலுார் துறையைச் சேர்ந்த குமரன் ஆகிய இருவர் என தெரிந்தது. அவர்கள் வைத்திருந்த டிராவல் பேக்கை, போலீசார் சோதனை செய்த போது அதில், 23 கிலோ கஞ்சா இருந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
