நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சட்டசபையில், நேற்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, முதன்முதலாக 2024 - 25ம் ஆண்டுக்கான பட்டெ்டை தாக்கல் செய்தார். சபையில் அவர் அருகில் அமர்ந்திருக்கும், அமைச்சர் உதயநிதி சட்டசபைக்கு வரவில்லை.
அதேபோல, இருக்கை மாற்றம் செய்யப்பட்ட, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், வரவில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயதாரணியும் வரவில்லை. அமைச்சர் தங்கம் தென்னரசு, பட்ஜெட் உரை அடங்கிய பெட்டியை கையில் ஏந்தியபடி, முதல்வருடன் சபை உள்ளே வந்தபோது, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அமைச்சர்கள் மேஜையை தட்டி வரவேற்றனர்.

