ADDED : செப் 29, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி: கரூரில் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த துணை முதல்வர் உதயநிதி, தனி விமானத்தில் மீண்டும் துபாய் சென்றார்.
சென்னையில் இருந்து, துணை முதல்வர் உதயநிதி குடும்பத்துடன் நேற்று முன்தினம் காலை துபாய் சென்றார். கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தை அறிந்ததும், துபாயில் இருந்து திரும்பினார்.
துபாயில் இருந்து திருச்சிக்கு நேற்று காலை 6:00 மணிக்கு தனி விமானம் மூலம் வந்தார். பின், அவர் கரூர் அரசு மருத்துவமனைக்கு சென்று, நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அதை தொடர்ந்து, திருச்சி விமான நிலையம் சென்ற அவர், தனி விமானம் மூலம் மீண்டும் துபாய் சென்றார்.