சூடு தாங்காமல் கூட்டணி கட்சியினர் விழுந்தடித்து ஓடப் போகின்றனர்
சூடு தாங்காமல் கூட்டணி கட்சியினர் விழுந்தடித்து ஓடப் போகின்றனர்
ADDED : அக் 23, 2024 10:53 PM
அ.தி.மு.க., மோசமான கால கட்டத்தில் இருப்பதாக தி.மு.க.,வினர் கூறி வருகின்றனர். வரும் 2026 சட்டசபைத் தேர்தல் அ.தி.மு.க.,வுக்கு சோதனைக் களம் என்றும் சொல்லி வருகின்றனர். கடந்த காலங்களில் எத்தனையோ முறை தோல்விகளில் இருந்து மீண்டு இருக்கிறது. அதே போல, 2026 தேர்தலில் தோல்வியில் இருந்து மீள்வோம். தமிழகத்தில் மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வருவோம். இதில் மாற்றம் எதுவும் இருக்காது.
தி.மு.க.,வில் துரைமுருகன் போன்ற சீனியர் தலைவர்களையெல்லாம் ஓரம்கட்டி விட்டு, தன்னுடைய மகன் என்பதாலேயே அமைச்சர் உதயநிதியை துணை முதல்வர் ஆக்கி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். துணை முதல்வராக்கப் போகின்றனர் என்ற செய்தி வெளியான நிலையில், கட்சிக்குள் பெரும் புகைச்சல் ஏற்பட்டது. அந்த புகைச்சல் இப்போது கொழுந்து விட்டு எரியத் துவங்கி உள்ளது. அந்த நெருப்பு விரைவில் வெடிக்கவும் போகிறது. சூடு தாங்காமல், கூட்டணி கட்சியினர் விழுந்தடித்து ஓடி விடுவர்.
பொன்னையன், முன்னாள் அமைச்சர்

