காளைகளுக்கு உணவளிக்க முடியவில்லை; ரேணுகாதேவி 6 மாத குழந்தையுடன் கண்ணீர் மல்க பேட்டி!
காளைகளுக்கு உணவளிக்க முடியவில்லை; ரேணுகாதேவி 6 மாத குழந்தையுடன் கண்ணீர் மல்க பேட்டி!
ADDED : டிச 02, 2024 11:43 AM

திண்டுக்கல்: 'கணவருக்கு விபத்தில் காலில் அடிபட்டு நடக்க முடியாமல் போனதால் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வருகிறோம். கருணை அடிப்படையில் ரேஷன் கடை விற்பனையாளர் வேலை வழங்க கோரி மாவட்ட கலெக்டரிடம் ரேணுகாதேவி என்பவர் மனு அளித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியைச் சேர்ந்த ரேவதி என்ற ரேணுகாதேவி. இவர் சிறுவயதிலிருந்து 165 வாடிவாசல்களில் காளைகளை அவிழ்த்துள்ளார். மேலும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பரிசுகளும் பெற்றுள்ளார். தற்போது, இவருக்கு திருமணமாகி மூன்று வயது மற்றும் ஆறு மாதம் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் சிவாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டு கால் நரம்பு செயல் இழந்தது. இதனால் அவர் நடக்க முடியாமல் இருந்து வருகிறார்.
தங்களின் குழந்தைகளை வளர்க்க முடியாமலும், தற்போது வளர்த்து வரும் இரண்டு காளைகளுக்கு உணவளிக்க முடியாமலும் இருந்து வருகிறேன் என கண்ணீர் மல்க மாவட்ட கலெக்டரிடம் ரேணுகாதேவி என்பவர் மனு அளித்துள்ளார். அவர், 'கருணை அடிப்படையில் எனக்கு ரேஷன் கடை விற்பனையாளர் பணி வழங்க வேண்டும் என மனு அளிக்க வந்துள்ளேன். எனக்கு இந்த பணியினை வழங்கி எனது வாழ்வாரத்தை பாதுகாக்க வேண்டும்' என நிருபர்களிடம் தெரிவித்தார்.

