ADDED : டிச 16, 2024 12:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி: தி.மு.க., ராஜ்யசபா உறுப்பினர் சிவா அளித்த பேட்டி:
மணிப்பூர் விவகாரம், அதானி விவகாரம், சம்பல் உள்ளிட்ட எந்த பிரச்னையை எழுப்பினாலும், பிரதமர் மோடி சபைக்கு வந்து பதில் சொல்வதில்லை.
சபையில் எதிர்க்கட்சியினரை பேச அனுமதிப்பதுமில்லை.
ஆளுங்கட்சியினர் பேசுவது மட்டும் தான், சபை குறிப்பில் இடம் பெறுகிறது.
மற்றவர்கள் பேசுவது சபை குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது. எதிர்க்கட்சியினர் அமளி செய்வது போன்ற தோற்றம் மட்டுமே சபைக்கு வெளியே பரப்பப்படுகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அவசர நிலை இருந்தது. இப்போது அறிவிக்கப்படாத அவசர நிலை நடைமுறையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

