நெல்லை - சென்னை இடையே 20 பெட்டிகளுடன் புதிய வந்தே பாரத்
நெல்லை - சென்னை இடையே 20 பெட்டிகளுடன் புதிய வந்தே பாரத்
ADDED : செப் 25, 2025 06:10 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி - சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை, இதுவரை 16 பெட்டிகளுடன் இயங்கி வந்தது. 20 பெட்டிகளுடன் புதிய ரயில் இயக்கம் நேற்று தொடங்கியது.
காலை 6.05 மணிக்கு திருநெல்வேலியில் புறப் பட்டு மதியம் 1.55 மணிக்கு சென்னை எழும்பூர் நிலை யத்தை சென்றடையும் இந்த ரயில், அதிநவீன வசதி மற்றும் அதிவேகத்தால் பொதுமக்களின் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுவரை இயக்கப்பட்ட 16 பெட்டி நீல நிற ரயிலுக்கு பதிலாக, காவி நிறத்தில் உள்ள 20 பெட்டிகளைக் கொண்ட புதிய ரயில் கடந்த வாரமே திருநெல்வேலி வந்தது. புதிய ரயில் நேற்று முதல் சேவையை துவக்கியது.
ஆயுத பூஜை, விஜயதசமி, தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ள நிலையில், 20 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில் இயக்கம் தொடங்கியிருப்பது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.