லஞ்ச பணத்துடன் குளத்தில் குதித்த வி.ஏ.ஓ., சஸ்பெண்ட்
லஞ்ச பணத்துடன் குளத்தில் குதித்த வி.ஏ.ஓ., சஸ்பெண்ட்
ADDED : மார் 20, 2025 11:22 AM

கோவை: கோவை, பேரூர் பெரியகுளத்தில் லஞ்ச பணத்துடன் குதித்த வி.ஏ.ஓ., வெற்றிவேல் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கோவை, தொம்பிலிபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவர், வாரிசு சான்று வாங்க, விண்ணப்பித்து இருந்தார். சான்று வழங்க மத்வராயபுரம் வி.ஏ.ஓ., வெற்றிவேல், 5,000 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். கிருஷ்ணசாமி 1,000 ரூபாய் கொடுத்தார்.
கிருஷ்ணசாமி அளித்த புகாரின்படி, லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய, 3,500 ரூபாய் பணத்தை, கிருஷ்ணசாமி மூலம் வெற்றிவேலிடம் கொடுக்க வைத்தனர். அப்போது, போலீசார் பிடிக்க முயன்ற போது, தனது இருசக்கர வாகனத்தில் வெற்றிவேல் தப்ப முயன்றார்.
பேரூர் பெரிய குளத்தின் கரை அருகே செல்லும்போது, போலீசாருக்கு பயந்து வெற்றிவேல் குளத்தில் குதித்தார். குளத்தில் பணத்தை தேடும் பணி நடந்தது. லஞ்ச ஒழிப்பு போலீசார் வெற்றிவேலை கைது செய்து விசாரித்தனர். இன்று (மார்ச் 20) வி.ஏ.ஓ., வெற்றிவேலை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.