தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணிக்கு இடையூறாக பல்வேறு பணிகள்

ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணிக்கு இடையூறாக பல்வேறு பணிகள்

ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணிக்கு இடையூறாக பல்வேறு பணிகள்


ADDED : நவ 14, 2026 06:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2026 06:27 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தஞ்சாவூர்: ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணிக்கு, இடையூறாக பல்வேறு பணிகளை கொடுத்து வருவதால், மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படுகிறது என, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலப் பொதுச்செயலர் சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் இன்று (நவ.,14), தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின், மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது:

இந்தியாவிலேயே, தமிழ்நாடு கல்வி வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருவதற்கு, அடிப்படை காரணம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள். ஆனால், இன்றைக்கு ஆசிரியர்கள் அச்சத்துடன் பணியாற்ற வேண்டிய நிலைமை இருக்கிறது.

தகுதி தேர்வு என்று ஒன்றை கொண்டு வந்து, 25 ஆண்டுகள் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களை இன்றைக்கு அல்லல் படக்கூடிய ஒரு நிலை உருவாகியுள்ளது. எனவே, தகுதி தேர்வை உடன் ரத்து செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு தீர்க்கப்படாமல் உள்ளதை தீர்க்க வேண்டும்.

பழைய ஒய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவேன் என முதல்வர் விஜய், தேர்தல் வாக்குறுதி அளித்ததை செயல்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணிக்கு, இடையூறாக பல்வேறு பணிகளை கொடுத்து வருவதால், மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படுகிறது. இதனை அறவே நீக்கப்பட வேண்டும்.

நாமக்கல் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், ஆசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வரும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுக்காவிட்டால், நாமக்கலில் உண்ணாவிரதப் போரட்டம் நடத்தப்படும்.

தொடக்கப்பள்ளி, நடுநிலை, உயர்நிலைப்பள்ளிகளில், 3,000 தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை உடன் நிரப்ப வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us