UPDATED : நவ 15, 2026 08:56 PM
ADDED : நவ 15, 2026 08:54 PM
சென்னை: ‘கிரானைட்’ வீரமணியிடம், பாலியல் வன்முறைக்கு சிறுமியரை அழைத்து வந்த, அவரின் கார் ஓட்டுநர் பாலா என்ற பெருமாள், 32, கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறுமியரை பாலியல் வன்முறை செய்ததாக, கிரானைட் வீரமணி, 85, மீது, மேலும் ஒரு சிறுமி அளித்த புகாரின் படி, அவர் மீது ஒன்பதாவது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு எல்லாவற்றிலும், அவரது தோழி சாந்தி உட்பட, 10 பேர் தொடர்பில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், வீரமணி பாலியல் வன்முறை செய்வதற்காக, சிறுமியரை அழைத்து வந்த, அவரின் கார் ஓட்டுநர் பாலா என்ற கவுதமன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவர் சென்னை புழல் மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார். இதுவரை, வீரமணியால், 13 சிறுமியர் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
