ADDED : செப் 15, 2025 02:48 AM

கோட்டக்குப்பம்: தோஸ்த் வாகனம் கடத்திய நபரை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி அண்ணா சாலையில் கோபால கிருஷ்ணன் என்பவர், எலக்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறார்.
இந்த கடையில் இருந்து நேற்று கோட்டக்குப்பம், இ.சி.ஆரில்., உள்ள திருமண நிலையத்தில், இசைக்கச்சேரிக்கு எலக்ரானிக் பொருட்களை வாடகைக்கு தோஸ்த் வாகனத்தில் அனுப்பி வைத்தார்.
கன்னியக்கோவிலை சேர்ந்த குருமூர்த்தி வாகனத்தை ஓட்டிச் சென்றார். மண்டபத்தில் வாகன ஓட்டுநர் இறங்கி, பொருட்களை இறக்கி உள்ளே எடுத்து சென்றார்.
அந்த நேரத்தில் மர்ம நபர் ஒருவர் போதையில் அந்த தோஸ்த் வாகனத்தை கடத்தி ஓட்டி சென்றார்.
இதைப்பார்த்து மண்டபத்தில் இருந்தவர்கள் அந்த வாகனத்தை விரட்டிச்சென்று, புதுச்சேரி காமராஜர் மணி மண்டபம் அருகே மடக்கி பிடித்து, கோட்டக்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில், அவர் சென்னை எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த கோபாலசுந்தரம் மகன் சரத் (எ) சரத்குமார், 25; என்பதும், அவர் மீது ஏற்கனவே சென்னையில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.
அதன் பேரில் போலீசார் அவர் மீது கடத்தல் வழக்கு பதிந்து, சரத்குமாரை கைது செய்தனர்.