ஏப்., 16ல் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் துணைவேந்தர்கள் கூட்டம்
ஏப்., 16ல் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் துணைவேந்தர்கள் கூட்டம்
ADDED : ஏப் 13, 2025 10:03 PM

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து பல்கலை துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் வரும் ஏப்.,16ம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பல்கலை துணைவேந்தர்கள், பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் ஏப்.,16ம் தேதி நடக்கும், என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வரை பல்கலை வேந்தராக்கும் மசோதாவுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதியளித்த நிலையில் இந்தக் கூட்டம் நடக்கிறது. உயர் கல்வியை மேம்படுத்துவது தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.
தீர்ப்பு
தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்து வருகிறார் என கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட், பல்கலைக் கழகங்கள் சட்டத்திருத்த மசோதா உள்பட 10 மசோதாக்களுக்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தி, அனுமதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

