'சினிமா கவுரவ வேடம் போல் அரசியலில் வந்து போகிறார் விஜய்'
'சினிமா கவுரவ வேடம் போல் அரசியலில் வந்து போகிறார் விஜய்'
ADDED : ஜன 28, 2025 07:31 PM
புதுக்கோட்டை:''சினிமாவில் கவுரவ வேடத்தில் நடிப்பவர், படத்தில் அவ்வப்போது வந்து போவார். அதை போல, நடிகர் விஜய் அரசியலைப் பயன்படுத்துகிறார். அவ்வப்போது வந்து அரசியல் போகிறார்,'' என்று புதுக்கோட்டையில், சிவகங்கை காங், எம்,பி., கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கையில் அவர் அளித்த பேட்டி:
நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் தீபாவளிக்கு பின், பயனாளிகளுக்கான ஊதியம் வங்கி கணக்கில் இதுவரை வரவு வைக்கப்படவல்லை என புகார் உள்ளது. அதனால், உடனடியாக மத்திய அரசு உடனடியாக ஊதியம் வழங்க, நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஈ.வெ.ரா., விவகாரம் தேவையற்றது.
படித்த இளைஞர்களுக்கு வேலையின்மை அதிகம் உள்ளது. நடுத்தர குடும்பங்களுக்கு நிர்வாக சிரமங்கள் குறித்து யாரும் பேசுவதில்லை. நாம் பேச வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது. சரித்திர சிந்தாந்தங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் விவாதிக்க தேவையற்றது.
வேங்கைவயல் சம்பவம் வேதனைக்குரியது. ஆனால், இந்த விசாரணை சரியில்லை என்றால் நீதிமன்றம் மூலம் தான் பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பழக்கம் உள்ளது. அதனால், பொது சிவில் சட்டம் தேவையற்றது.
திருமயம் சமூக ஆர்வலர் ஜெகபர்அலி கொலை வழக்கில் விசரணை நியாயமாக நடைபெற வேண்டும். கூலிப்படையினரை தமிழகத்தில் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
சினிமாவில் கவுரவ வேடத்தில் நடிப்பவர், படத்தில் அவ்வப்போது வந்து போவதைப் போல், நடிகர் விஜய் அரசியலில் அவ்வப்போது வந்து போகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.

