ADDED : ஜன 07, 2026 08:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
த.வெ.க., தலைவர் விஜயை, 'என் சக நடிகர்' என சொல்ல மாட்டேன். அவர் எனக்கு தம்பி முறை. தம்பி என்று தான் சொல்வேன். அவர் என்னை, 'அக்கா' என்று தான் அழைப்பார். அவர், ஜனநாயகன் படத்தை கடைசி படம் என அறிவித்திருப்பது எனக்கு அதிர்ச்சியளித்தது. விஜயின் ரசிகை நான். அவரது நடிப்பு, நடனம் எனக்கு பிடிக்கும்.
'பீஹாரில், நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக மாட்டார்' என கருத்துக்கணிப்புகளில் கூறினர். ஆனால், அவரை மீண்டும் ஆட்சிக்கு வர வைத்தோம். 'திருவனந்தபுரத்திலும் பா.ஜ.,வுக்கு வாய்ப்பில்லை' என கருத்துக்கணிப்பில் சொன்னார்கள். ஆனால், திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ., கைப்பற்றியது. அதுபோல், தமிழகத்திலும் கருத்துக் கணிப்புகள் தோற்றுப்போகும், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும். கூட்டணியில் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பேச்சு, இப்போது தான் ஆரம்பித்துள்ளது. கூட்டணி ஆட்சி பற்றி பின்னர் பார்ப்போம்.
-- குஷ்பு துணைத்தலைவர், தமிழக பா.ஜ.,

