sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போஸ்டர்களில் ஆனந்த் படம் கூடாது; கட்சியினருக்கு விஜய் உத்தரவு

/

போஸ்டர்களில் ஆனந்த் படம் கூடாது; கட்சியினருக்கு விஜய் உத்தரவு

போஸ்டர்களில் ஆனந்த் படம் கூடாது; கட்சியினருக்கு விஜய் உத்தரவு

போஸ்டர்களில் ஆனந்த் படம் கூடாது; கட்சியினருக்கு விஜய் உத்தரவு


ADDED : ஜூலை 29, 2025 12:16 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 12:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: த.வெ.க., உறுப்பினர் சேர்க்கை விளம்பரத்தில், அக்கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த் படத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பாக, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:


தமிழக வெற்றிக் கழகத்தில், கட்சி தலைவர் விஜய்க்கு அடுத்த அதிகார மையமாக பொதுச் செயலர் ஆனந்த் உள்ளார்.

நிர்வாகிகள் நியமனம் முதல், முக்கிய முடிவுகள் எடுப்பது வரை, ஆனந்த் முன்னின்று செய்கிறார். த.வெ.க.,வில் நியமிக்கப்பட்ட 120 மாவட்டச் செயலர்களில் 60க்கும் அதிகமானோர், அவரது தீவிர ஆதரவாளர்கள்.

தனியாக ஐ.டி., அணி


அவர்களுக்கு பெரிய அளவில் ஆனந்த் முக்கியத்துவம் கொடுப்பதோடு, அவர்களை வைத்து, கட்சி பணிகளில் தீவிரமாக இருப்பது போல் காட்டிக் கொள்கிறார். இதற்கென த.வெ.க.,வில் 'வாட்ஸாப்' குழு துவக்கப்பட்டு உள்ளது. அதில், ரகசிய உறுப்பினராக விஜயும் உள்ளார்.

அந்த குழுவில், கட்சியின் அன்றைய நிகழ்வுகளை மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள் பதிவு செய்கின்றனர்.

தனக்கென தனியாக ஐ.டி., அணி நடத்தும் ஆனந்த், அவர்கள் வாயிலாக படங்களை பெற்று, குழுவில் பதிவேற்றி, விஜய் கவனத்தை ஈர்த்து வருகிறார். அதே நேரத்தில், விஜய்க்கு இணையாக, தன்னையும் விளம்பரப்படுத்தி வருகிறார்.

த.வெ.க.,வில் இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டு, ஒவ்வொரு வீட்டிலும், 'மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர்' என்ற வாசகம் இடம் பெற்ற ஸ்டிக்கரை கட்சியினர் ஒட்டி வருகின்றனர்.

அதில், விஜய் படத்துடன் ஆனந்த் படமும் இருப்பதால், யார் முதல்வர் வேட்பாளர் என்ற குழப்பம், தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் எழுந்துள்ளது.

ஏற்கனவே, புதுச்சேரி முதல்வர் ஆகும் கனவில் ஆனந்த் இருப்பதாக கூறப்படுகிறது. அவர், விஜய்க்கு இணையாக, தன்னையும் முன்னிலைப்படுத்தி வருவதை, கட்சி நிர்வாகிகள் சிலர், விஜய் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

புதிய ஸ்டிக்கர்


இதனால், உஷார் ஆன விஜய், 'உறுப்பினர் சேர்க்கை விளம்பர ஸ்டிக்கரில், ஆனந்த் படத்தை பயன்படுத்த வேண்டாம். இனிமேல், கட்சி தலைமை ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளுக்கான விளம்பரங்களுக்கு, என் அனுமதியை பெற வேண்டும். கட்சி தொடர்பான விளம்பரங்களிலும், இனி ஆனந்த் படம் போடத் தேவையில்லை' என, உத்தரவிட்டு உள்ளார்.

இதையடுத்து, ஆனந்த் படத்துடன் கூடிய ஸ்டிக்கர் மீது, விஜய் மட்டும் இருக்கும் புதிய ஸ்டிக்கரை கட்சியினர் ஒட்டி வருகின்றனர்.

ஆனால், ஆனந்த் ஆதரவாளர்கள், அவரது புகைப்படம் இடம்பெற்ற ஸ்டிக்கரை அகற்றாமல் அப்படியே வைத்திருப்பது, த.வெ.க.,வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.






      Dinamalar
      Follow us