ADDED : பிப் 18, 2024 05:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : நடிகர் விஜய் தன் கட்சி பெயரில் திருத்தம் செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசியலில் கால் பதித்துள்ள நடிகர் விஜய், இம்மாதம் 2ம் தேதி, 'தமிழக வெற்றி கழகம்' என்ற கட்சியை துவக்கி, அதன் பெயரை முறைப்படி அறிவித்தார்.
கட்சி பெயரை அறிவித்ததும். தமிழக வெற்றிக் கழகம் எனப் பெயர் வர வேண்டும். தமிழ் இலக்கணப்படி, 'க்' விடுபட்டுள்ளது என்ற விமர்சனங்கள் எழுந்தன.
அதைத் தொடர்ந்து, கட்சிப் பெயரில் 'க்' சேர்க்க விஜய் முடிவு செய்துள்ளார். இவ்விபரத்தை தேர்தல் கமிஷனிடம் தெரிவித்துள்ளதாகவும், தேர்தல் கமிஷன் ஏற்றுக் கொண்ட பின், 'தமிழக வெற்றிக் கழகம்' என, கட்சியின் பெயர் அறிவிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.