லாயிட் எலக்ட்ரானிக்ஸின் விளம்பர துாதர் விஜய் சேதுபதி
லாயிட் எலக்ட்ரானிக்ஸின் விளம்பர துாதர் விஜய் சேதுபதி
ADDED : அக் 20, 2024 01:28 AM
சென்னை,:'ஹேவெல்ஸ் இந்தியா' நிறுவனத்தின், 'ஏசி', வாஷிங் மெஷின், பிரிட்ஜ், எல்.இ.டி., 'டிவி' உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களுக்கான முன்னணி நுகர்வோர் பிரண்டாக, 'லாயிட் எலக்ட்ரானிக்ஸ்' உள்ளது. இந்த நிறுவனத்தின், தமிழகத்திற்கான விளம்பர துாதுவராக நடிகர் விஜய் சேதுபதி நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து, ஹேவெல்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் யோகேஷ் குமார் குப்தா கூறியதாவது:
தமிழ்நாடு எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சந்தை.
விஜய் சேதுபதி போன்ற நடிகருடன் இணைவதன் வாயிலாக, லாயிடின் பார்வை, பிராண்ட் விழிப்புணர்வு போன்றவை, வாடிக்கையாளர்கள் இடையே நெருங்கிய தொடர்பை ஏற்படுத்துவதில், முக்கிய பங்கு வகிக்கும் என, நம்பிக்கை கொண்டுள்ளோம்.
நாங்கள் தொடர்ந்து புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறோம். அவை, நுகர்வோர் இடையே மிகுந்த வரவேற்பை பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிறுவனத்தின் செயல் துணை தலைவர் ரோஹித் கபூர் கூறுகையில், ''லாயிட் குடும்பத்திற்கு விஜய் சேதுபதியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவரது புகழ், மக்களுடனான தொடர்பு ஆகியவை, விளம்பர துாதுவராக்கி உள்ளது.
''தரம், நம்பகத்தன்மை மற்றும் வசதியை வழங்கு வதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம்,'' என்றார்.