ADDED : நவ 11, 2025 07:01 AM

தேசம், தெய்வம், தர்மம் ஒன்றோடு ஒன்று இணைந்த சக்திதான் இந்தியா. இந்த தேசத்தின் பெரும்பான்மை சமுதாயம் படும் அவலமும், அவமானமும், வருங்கால அபாயத்தை கூறுகிறது. காஷ்மீரில் ஹிந்துக்கள் நிலைமை மோசமாக உள்ளது. ஹிந்து பள்ளிகள், கோவில்கள் மூடப்படுகின்றன. இந்தியா என்ற ஒரே நாட்டில் மட்டும் தான் பெரும்பான்மையை விட, சிறுபான்மை மக்களுக்கு சலுகைகள் அதிகம் தரப்படுகின்றன.
அபாயத்தில் இருக்கும் ஹிந்துக்கள், ஹிந்து உணர்வோடு வாழ்ந்தால்தான், எதிர்கால தலைமுறை ஹிந்துவாகவே வாழ முடியும். இனிமேலாவது, ஹிந்துக்கள் விழித்தெழ வேண்டும். மேலும், ஹிந்துவாக வாழ்வதை விட, ஹிந்துவாக ஓட்டளித்தால் மட்டுமே ஹிந்து தர்மத்தை காக்க முடியும். ஜாதி, சின்னம் பார்த்து ஓட்டு போடுபவர்கள், வரும் 2026 தேர்தலில் ஹிந்துவாக ஓட்டு போடுங்கள். தற்போது, ஹிந்துக்கள் அதிகாரத்தில் இருக்க வேண்டியது அவசியம்.
- ராம சீனிவாசன், பொதுச்செயலர், தமிழக பா.ஜ.,

