ADDED : டிச 26, 2025 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பணம் கொடுத்தால் தான் ஓட்டு போடவே வருகின்றனர். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது, பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் கொடுத்தார். தற்போது, தி.மு.க., அரசு, பொங்கல் பரிசு தொகையாக 3,000 ரூபாய் கொடுக்க உள்ளதாக தெரிகிறது. ஓட்டுகளின் மதிப்பு கூடிக்கொண்டு போகிறது.
திருப்பரங்குன்றம் பிரச்னையில் தி.மு.க., அரசின் நடவடிக்கை சரியில்லை. இரு மத வழிபாட்டிற்கும் தடையின்றி, மத நல்லிணக்க குழு அமைத்து தீர்வு கண்டிருக்க வேண்டும். வேலை உறுதி திட்டம் வாயிலாக, உழைக்கும் மக்களை சும்மா உட்கார வைப்பதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. இத்திட்டத்தால் எத்தனை மரக்கன்றுகள் நட்டுள்ளீர்கள்? துார்வாரிய குளங்கள் எத்தனை? 'உழைக்காமல் இருப்பதும் ஒரு வகை திருட்டு' என காந்தியே கூறியுள்ளார்.
- சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

