ADDED : நவ 06, 2025 07:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி.மு.க.,விற்கு 10 ஆண்டுகள் வேலை செய்ததற்காக, பாவ மன்னிப்பு கோருகிறேன். எதிர்க்கட்சியாக இருந்தபோது, தி.மு.க.,வினர் நல்லவர்களாக தெரிந்தனர். அதனால் தான், 2021 சட்டசபை தேர்தலில், கருப்பு, சிவப்பு நிற சைக்கிளில் வந்து, விஜய் ஆதரவு தெரிவித்தார்.
கரூரில் செந்தில் பாலாஜி ரவுடின்னு சொல்றாங்க. அங்க ஏன் போனீங்கன்னு கேட்கின்றனர். ஆறு மாதம் பொறுங்கள்; யாரு ரவுடி என்று உங்களுக்கு தெரியும். சூழ்ச்சி தெரியாததால் தான், கரூரில் விஜய் முதலில் காவல் துறைக்கு நன்றி சொன்னார்.
பொதுவாக எந்த சம்பவமாக இருந்தாலும், டி.எஸ்.பி., - எஸ்.பி.,யை முதலில் 'சஸ்பெண்ட்' செய்வர். ஆனால், கரூரில் அதை செய்யவில்லை. கூட்டு சதியில் செந்தில் பாலாஜி, மகேஷ், உதயநிதி ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
மற்றவர்களை கொன்றாலும் பரவாயில்லை என்பதை, கட்சி மாறி வந்த செந்தில் பாலாஜி போன்றோர் செய்வர். ஆதவ் அர்ஜுனா தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர், த.வெ.க.,

