ஐகோர்ட் வளாகத்தில் நாய்கள் நடமாட்டம்; பார் கவுன்சிலுக்கு 'ஆர்டர்'
ஐகோர்ட் வளாகத்தில் நாய்கள் நடமாட்டம்; பார் கவுன்சிலுக்கு 'ஆர்டர்'
ADDED : ஆக 13, 2024 07:14 AM
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தை, துாய்மையான வளாகமாக பராமரிக்க கோரி, பாரிமுனையை சேர்ந்த ராஜ்குமார் தொடர்ந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய, முதல் பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முழுதும், 70 நாய்கள் சுற்றித் திரிகின்றன; அந்த நாய்கள் யாரையும் துரத்தியதாகவோ, கடித்ததாகவோ எந்த சம்பவமும் இல்லை' என, வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
உடன், 'நீதிமன்ற வளாகத்தில் சுற்றித்திரியும் நாய்களால், எதிர்காலத்தில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாது என்பதற்கு, எந்த உத்திரவாதமும் இல்லை' என, தெரிவித்த நீதிபதிகள், நாய்கள் சுற்றி திரிவதை கட்டுப்படுத்துவது தொடர்பாக வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டத்தை கூட்டி, ஆலோசனைகள் பெற்று, எட்டு வாரங்களில் உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு அறிக்கை அளிக்கும்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

