உள்ளடக்கத்திற்கு செல்ல

'நடந்தாய் வாழி காவிரி' திட்டத்தை செயல்படுத்தணும்
'நடந்தாய் வாழி காவிரி' திட்டத்தை செயல்படுத்தணும்
ADDED : ஜூலை 17, 2026 06:40 AM

அ நிறம் | அளவு
காவிரியை பாதுகாக்கும் நோக்கில், 'நடந்தாய் வாழி காவிரி' திட்டத்தை, அ.தி.மு.க., ஆட்சியில், 2019ம் ஆண்டு முன்னெடுத்தோம். இதற்காக, 11,250 கோடி ரூபாய் மதிப்பீட்டில், முதல்நிலை திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, பிரதமரை நேரில் சந்தித்து, நானே வலியுறுத்தினேன். ஆனால், தி.மு.க., ஆட்சியில் இத்திட்டத்துக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை.
தங்களை துாய சக்தி என கூறிக் கொள்ளும் த.வெ.க., அரசு, வாய்ச் சவடால் அடிப்பது, 'ரீல்ஸ்' வெளியிடுவது, குதிரை பேரம் நடத்தி ஆட்சியை காப்பாற்ற முயல்வது போன்ற தகிடுதத்த வேலைகளை கைவிட்டு, தி.மு.க., அரசு முடக்கி வைத்த, 'நடந்தாய் வாழி காவிரி' திட்டத்தை, மத்திய அரசின் துணையோடு உடனடியாக தொடங்க வேண்டும்.
- பழனிசாமி, பொதுச்செயலர், அ.தி.மு.க.,
