ADDED : செப் 09, 2025 07:03 AM

பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்த, அ.தி.மு.க., ஆட்சியை நிறுவ, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சுற்றுப்பயணம் செய்கிறார். ஒருங்கிணைந்த அ.தி.மு.க., என செங்கோட்டையன் சொல்லும், 'கான்செப்ட்'டே தவறு. செங்கோட்டையன் கருத்துக்கும், பா.ஜ.,வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கூட்டணியின் முதல் நாளிலேயே, 'பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர்' என அமித் ஷா கூறி விட்டார். தமிழக பா.ஜ., தலைவரை விமர்சனம் செய்தால், நாங்களும் பதிலுக்கு, தினகரனை விமர்சிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
தேர்தலில், பின்னடைவை ஏற்படுத்த செங்கோட்டையன் போல், மேலும் பலர் வருவர்; அது தேர்தலில் எதிரொலிக்காது. பா.ஜ., நிர்வாகிகள் யாரும் செங்கோட்டையனை சந்திக்க தயாராக இல்லை; பழனிசாமிக்கு எதிராக செயல்படும் யாரையும், பா.ஜ.,வினர் சந்திக்க மாட்டார்கள்.
-ராமலிங்கம்,
துணைத்தலைவர், தமிழக பா.ஜ.,