அஸீல் கோழி வளர்ப்புக்கு வரவேற்பு: கூடுதல் நிதி ஒதுக்க பரிந்துரை
அஸீல் கோழி வளர்ப்புக்கு வரவேற்பு: கூடுதல் நிதி ஒதுக்க பரிந்துரை
ADDED : செப் 28, 2025 06:27 AM
சென்னை: 'அஸீல்' இன கோழி வளப்பு திட்டத்திற்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால், கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யும்படி தமிழக அரசுக்கு கால்நடை பராமரிப்பு பரிந்துரை செய்துள்ளது.
கிராமங்களில் உள்ளோரை, நாட்டுக்கோழி வளர்ப்பில், தொழில் முனைவோராக மாற்ற, 50 சதவீத மானியத்தில், 'அஸீல்' இன நாட்டு கோழிப்பண்ணை அமைக்கும் திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்துகிறது. கால்நடை பராமரிப்பு துறை சார்பில், ஆறு கோடி ரூபாய் மதிப்பில், தமிழகம் முழுதும், 360 பயனாளிகளுக்கு, 50 சதவீத மானியத்தில், நான்கு வார வயதுடைய, தலா, 250 அஸீல் இன நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன.இத்திட்டத்திற்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கோழி பெற, 600 பேர் கூடுதலாக விண்ணப்பித்து உள்ளனர். எனவே, அவர்களுக்கும் திட்டம் சென்றடையும் வகையில், தேவையான அளவு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு, கால்நடைத்துறை பரிந்துரை செய்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.