ADDED : செப் 25, 2025 02:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, அவர் கட்சிக்கு விசுவாசமாக இருக்கட்டும்; பின், எங்களை பற்றி பேசட்டும். நான் நாற்காலிக்குள் புகுந்து, பதவிக்கு வரவில்லை.
பழனிசாமியுடன் இருந்த ஒவ்வொருவரும் வெளியேறி வரும் நிலையில், காங்., பற்றி என்ன திடீர் கவலை அவருக்கு?
கம்யூனிஸ்ட் கட்சியை கூட்டணிக்கு அ.தி.மு.க., அழைத்தது; அவர்கள் சேராததால், உடனடியாக எதிராக பழனிசாமி பேசினார்.
இப்போது காங்கிரஸ் பற்றி பேசுகிறார். எங்களுக்கு எவ்வளவு தொகுதிகள் வேண்டும் என்பதை, எங்கு கேட்க வேண்டுமோ, அங்கு கேட்போம்.
- செல்வப்பெருந்தகை, தலைவர், தமிழக காங்.,