ADDED : டிச 16, 2024 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: தமிழக பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் அளித்த பேட்டி:
சட்டசபை கூட்டத் தொடர் இரண்டு நாட்கள் பெயருக்காக நடத்தப்பட்டுள்ளது.
வேகமாக வளர்ந்து வரும் முன்னோடி மாநிலமான தமிழகத்தில், அன்றாடம் நிலவும் பிரச்னைகள் குறித்து, ஆக்கப்பூர்வமாக விவாதம் நடத்த, சட்ட சபையில் நாட்களை குறைத்தது மிகப்பெரிய ஏமாற்றம்.
நான்கு நிமிடங்களில் பேசி முடிக்க சொல்வதோடு, அனைவருக்கும் வாய்ப்பு கொடுப்பதில்லை. அதனால், மக்கள் பிரச்னைகளை சபையில் பேச முடிவதில்லை.
ஆட்சிக்கு வருவதற்கு முன், 100 நாள் சபை நடத்துவோம் என்ற வாக்குறுதி, காற்றில் பறக்க விடப்பட்டது. மத்திய அரசுக்கு எதிராக அரசியல் செய்வதன் வாயிலாக, தங்களை நிலை நிறுத்திக்கொள்ள முடியும் என்பதே தி.மு.க.,வின் நிலைப்பாடு.
இவ்வாறு அவர் கூறினார்.

