தி.மு.க.,விடம் கூடுதல் 'சீட்' கேட்பதில் என்ன தவறு? காங்கிரஸ் செயலர் கேள்வி
தி.மு.க.,விடம் கூடுதல் 'சீட்' கேட்பதில் என்ன தவறு? காங்கிரஸ் செயலர் கேள்வி
ADDED : டிச 12, 2025 05:23 AM
சென்னை: “தி.மு.க., கூட்டணியில் காங்., அதிக தொகுதிகளை கேட்பதில் என்ன தவறு,” என, அகில இந்திய காங்கிரஸ் செயலரும், முன்னாள் எம்.பி.,யுமான விஸ்வநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் அளித்த பேட்டி:
நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க.,வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா என்பது குறித்து டில்லி மேலிடம் தான் முடிவு எடுக்க வேண்டும். தமிழகத்தில், கட்சிக்கு வளர்ச்சியும் எழுச்சியும் வேண்டும் என கருதுகிறோம். அந்த அடிப்படையில் காங்., தலைமையிடம் கூட்டணி கோரிக்கையை வைத்திருக்கிறோம்.
எங்கள் மேலிடம் யாருடன் பேசுகிறது; எவருடன் பேசுகிறது என்பதெல்லாம் சொல்ல முடியாது. தி.மு.க.,விடம் காங்கிரஸ் கூடுதலாக 'சீட்' கேட்பதில் என்ன தவறு இருக்கிறது; கேட்பதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது.
காங்கிரஸ், கடந்த 2004 முதல் தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணி தான், லோக்சபா, சட்டசபை தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. காங்கிரசில் பெரும்பாலானோருக்கு, அமைச்சரவையில் அங்கம் வகிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அந்த ஆசையில் என்ன தவறு இருக்கிறது? ஆசை இருந்தால் தான் கட்சி நடத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

