மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்ப்பு அலுவலர் நியமனம் எப்போது?
மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்ப்பு அலுவலர் நியமனம் எப்போது?
ADDED : மே 24, 2025 07:36 PM
சென்னை:'அனைத்து அரசு துறைகளிலும், மாற்றுத்திறனாளி களுக்கான குறைதீர்ப்பு அலுவலர் நியமிக்கப்பட வேண்டும்' என, அ.தி.மு.க., ஆட்சியில், 2020ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையை, அதிகாரிகள் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுஉள்ளனர்.
'மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் -- 2016'ன்படி, அனைத்து அரசு துறைகளிலும், மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்ப்பு அலுவலர் நியமிக்க வேண்டும் என, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, 2020ல் அரசாணை வெளியிட்டது. இதை அமல்படுத்த அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை.
அதனால், துறை ரீதியான புகார்களை, யாரிடம் தெரிவிப்பது என்று தெரியாமல் மாற்றுத்திறனாளிகள் அவதிப்படுகின்றனர்.
ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் அனைத்து துறைகளிலும், குறை தீர்ப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதுபோல, தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைத்து வகை மாற்றுத்திறனாளி ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் கருப்பையா கூறினார்.

