sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 விஜய்க்கு 'விசில்' சின்னம்; காங்கிரஸ் மகிழ்ச்சி

/

 விஜய்க்கு 'விசில்' சின்னம்; காங்கிரஸ் மகிழ்ச்சி

 விஜய்க்கு 'விசில்' சின்னம்; காங்கிரஸ் மகிழ்ச்சி

 விஜய்க்கு 'விசில்' சின்னம்; காங்கிரஸ் மகிழ்ச்சி


ADDED : ஜன 23, 2026 06:54 AM

Google News

ADDED : ஜன 23, 2026 06:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: நடிகர் விஜய் கட்சியான த.வெ.க.,விற்கு பொது சின்னமாக, 'விசில்' ஒதுக்கப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தலில், த.வெ.க., முதன்முறையாக போட்டியிட உள்ளது. அக்கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யக் கோரி தேர்தல் கமிஷனிடம் விண்ணப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், 234 சட்டசபை தொகுதிகளுக்கும் பொது சின்னமாக, 'விசில்' ஒதுக்கப்பட்டுள்ளது. த.வெ.க., தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் பெறாத கட்சி என்பதால், விசில் சின்னம் இந்த ஒரு தேர்தலுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து, த.வெ.க., சமூக ஊடகப்பிரிவு துணை பொதுச்செயலர் நிர்மல்குமார் கூறுகையில், “தேர்தல் கமிஷனிடம் அளித்த விருப்ப படிவத்தில், முதல் விருப்பமாக விசில் சின்னத்தை குறிப்பிட்டிருந்தோம். அத்துடன் ஆட்டோ, மோதிரம் என 10 சின்னங்களை பரிந்துரைத்திருந்தோம். இதில், விசில் சின்னத்தை விஜய் விரும்பி கேட்டிருந்தார். அவருக்கு பிடித்த விசில் சின்னமே ஒதுக்கப்பட்டுள்ளது,” என்றார்.

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தன் 'எக்ஸ்' பக்கத்தில், 'தமிழக சட்டசபை தேர்தலுக்கான விசில் ஊதப்பட்டு விட்டது; அனைத்து கட்சிகளும் இப்போது தயாராகி விட்டன' என பதிவிட்டுள்ளார். இது, காங்கிரஸ் கட்சியில் உள்ள விஜய் ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. 

தேர்தல் கமிஷனுக்கு விஜய் நன்றி


விசில் சின்னம் ஒதுக்கப்பட்டது குறித்து, த.வெ.க., தலைவர் விஜய் அறிக்கை:
த.வெ.க., வரலாற்றின் முதலாவது வெற்றி அத்தியாயம் துவங்கி இருக்கிறது. தேர்தல் கமிஷனில், நாம் விண்ணப்பித்த விசில் சின்னம் ஒதுக்கப்பட்டது மகிழ்ச்சி; தேர்தல் கமிஷனுக்கு நன்றி. விசில் எழுப்பும் ஒலி, மனிதர்களின் ஆனந்த ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடு. மக்கள் பாதுகாவலர்களின் கையில் இருப்பது விசில்.
த.வெ.க., பெறப்போகும் வெற்றியை, முன்கூட்டியே கணித்து, கட்டியம் கூறும் விதமாக, வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது, இயற்கையும் இறைவனும் நமக்கு அளித்த பரிசு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us