கோவில்பட்டி அருகே கழுகுமலையில் வெளுத்து வாங்கிய கோடை மழை: வெப்பத்தினால் தவித்து வந்த மக்கள் மகிழ்ச்சி
கோவில்பட்டி அருகே கழுகுமலையில் வெளுத்து வாங்கிய கோடை மழை: வெப்பத்தினால் தவித்து வந்த மக்கள் மகிழ்ச்சி
ADDED : மே 05, 2024 09:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. பகல் மட்டுமின்றி, இரவு நேரங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவில்பட்டி அருகே கழுகுமலை பகுதியில் இன்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல வெயிலின் தாக்கம் இருந்த போதிலும்,, மாலைக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது மட்டுமின்றி, லேசான சாரல் மழையுடன் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. கடும் வெப்பத்தினால் அவதிப்பட்டு வந்த கழுகுமலை பகுதி மக்கள் இந்த மழையினால் சற்று நிம்மதி பெரும் மூச்சு அடைந்துள்ளனர்.