'கூடா நட்பு யாருக்கு கேடாய் முடியும் ? ' தி.மு.க., -- அ.தி.மு.க., கடும் வாதம்
'கூடா நட்பு யாருக்கு கேடாய் முடியும் ? ' தி.மு.க., -- அ.தி.மு.க., கடும் வாதம்
ADDED : ஏப் 27, 2025 01:33 AM
சென்னை: 'கூடா நட்பு யாருக்கு கேடாய் முடியும்' என்பது தொடர்பாக, தி.மு.க., -- அ.தி.மு.க., இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சட்டசபையில் நடந்த விவாதம்:
துணை சபாநாயகர் பிச்சாண்டி: நிலத்தில் வாழ்ந்த எலியும், நீரில் வாழ்ந்த தவளையும் நண்பர்களாகினர். இணை பிரியாமல் இருக்கும் நோக்கத்துடன், தவளை ஒரு கயிற்றால் எலியின் கால்களை, தன் கால்களுடன் இணைத்துக் கொண்டது.
முதலில் எலியை அழைத்துக் கொண்டு புல்வெளிக்கு சென்று, தவளை விளையாடியது. பின்னர், தான் வாழும் குளத்திற்கு அழைத்துச் சென்றது. தண்ணீரில் தாவி குதித்து, தவளை மகிழ்ச்சியுடன் கத்தியது. ஆனால், எலி தண்ணீரில் மூச்சுமுட்டி இறந்து போனது. அதுபோல, கூடா நட்பு கேடாய் முடியும்.
எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார்: எலி, தவளை கதையைச் சொல்லி, கூடா நட்பு கேடாய் முடியும் என, உங்களுக்கு உங்கள் தலைவரே சொல்லியிருக்கிறார்.
சபாநாயகர் அப்பாவு: துணை சபாநாயகர் பிச்சாண்டி யாரையும் குறிப்பிட்டு, கூடா நட்பு கதையை சொல்லவில்லை.
அ.தி.மு.க., - வேலுமணி: கூடா நட்பு பற்றி, பிச்சாண்டி பேசுகிறார். 1999ல் அந்தக் கட்சியுடன், தி.மு.க., கூட்டணி வைத்திருந்ததே, அதை பற்றியும் சொல்ல வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

