தி.மு.க., எம்.பி.,யாவாரா கமல் ? திடீர் நிபந்தனையால் அதிர்ச்சி
தி.மு.க., எம்.பி.,யாவாரா கமல் ? திடீர் நிபந்தனையால் அதிர்ச்சி
ADDED : பிப் 13, 2025 07:49 PM
சென்னை:மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலை, சென்னையில் அவரது இல்லத்தில் நேற்று, துணை முதல்வர் உதயநிதி சந்தித்து பேசினார். இருவரும் 45 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர்.
தேர்தல் வாக்குறுதிப்படி, வரும் ஜூலை மாதம் நடக்கவுள்ள ராஜ்யசபா தேர்தலில், கமலுக்கு வாய்ப்பு அளிக்க, தி.மு.க., முடிவு செய்துள்ளது. ஆனால், அவரது கட்சி சார்பாக இல்லாமல், தி.மு.க., சார்பில் கமல் போட்டியிட வேண்டும் என்றும், தி.மு.க., - எம்.பி.,க்கள் வரிசையில், அவர் இடம்பெற வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்படுவதாக தெரிகிறது. இது குறித்தே, நேற்றைய சந்திப்பில் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நடிகர் கமல் அதிர்ச்சி அடைந்திருப்பதாகத் தெரிகிறது.
சந்திப்பு குறித்து உதயநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கமலை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அன்போடு வரவேற்று, அரசியல், கலை என, பல்வேறு துறைகள் சார்ந்த கருத்துக்களை பறிமாறிக் கொண்டோம். கமலுக்கு என் அன்பும் நன்றியும் தெரிவிக்கிறேன்' என, கூறியுள்ளார்.
கமல் அறிக்கையில், 'நெடுநாள் நீடிக்கப் போகும் இனிய நினைவாக, இந்த சந்திப்பு அமைந்தது. உதயநிதியின் அன்புக்கும் பண்புக்கும் என் நன்றி' என, கூறியுள்ளார்.