கும்பாபிஷேகத்தில் முதல்வர் பங்கேற்காதது ஏன்: ஹிந்து முன்னணி
கும்பாபிஷேகத்தில் முதல்வர் பங்கேற்காதது ஏன்: ஹிந்து முன்னணி
ADDED : ஆக 21, 2025 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : ஹிந்து முன்னணி மாநில செயலர் செந்தில் குமார் அறிக்கை:
தமிழகத்தில் 42,௦௦௦ கோவில்கள் அறநிலையத்துறையின் கீழ் இருந்தன. தற்போது 36,௦௦௦ மட்டுமே உள்ளன. பல ஆயிரம் கோவில்களில் விளக்கேற்ற கூட ஆளில்லை.
முஸ்லிம்களின் ஜமாத்களும் கிறிஸ்துவர்களின் சர்ச்சுகளும், அவரவர் மதத்தை காப்பது, பரப்புவது, பாதுகாப்பது என செயல்படுகின்றன. ஆனால், அறநிலையத்துறையோ கோவில்களை அழித்து வருகிறது.
பல கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்த போதிலும் ஹிந்து மக்கள் உட்பட அனைவரும் ஓட்டளித்து வெற்றி பெற்ற முதல்வர் ஸ்டாலின், ஏன் ஒரு கும்பாபிஷேகத்தில் கூட பங்கேற்கவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

